திருமணம் ஆன பிறகும் இப்படிச் சுய இன்பம் செய்யலாமா?


504
Click to this video!

tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal

எனக்குத் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. ஒரு மகள் இருக்கிறாள். என் கணவருக்குத் தாம்பத்திய உறவு இல்லாமல் இருக்க முடியவில்லை. எனது மாதவிலக்கு காலங்களில் அவர் சுய இன்பம் செய்து சுகம் பெறுகிறார். இது எனக்குப் பிடிக்கவில்லை. திருமணம் ஆன பிறகும் இப்படிச் செய்யலாமா? என் கணவருக்கு மனத்தளவில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா?

முதலில் இவ்வளவு ஓவர் ரியாக்ட் செய்வதை நிறுத்துங்கள். சுய இன்பம் என்பது பசிக்கும் குழந்தைத் தன் கட்டை விரலைச் சுவைப்பதுபோல வெறும் ஒரு தேற்றல் நடவடிக்கை. அதை ஏன் மனத்தளவில் ஏதாவது பிரச்னையா, என்றெல்லாம் ஊதிப் பெரிதாக்குகிறீர்கள்?

திருமணமான முதல் சில ஆண்டுகளில் இப்படி “உடலுறவின்றி உறங்கமாட்டேன்“ என்று பல கணவர்கள் அடம்பிடிப்பது இயல்புதான். ஆனால் சில கலாசாரங்களில் மாதவிலக்கு காலத்தில் நோடச்சிங் டச்சிங் என்ற மரபு இருப்பதால், அந்த நாட்களில் கணவர்கள் இப்படி தங்களைத் தேற்றிக் கொள்வதும் வாடிக்கையே.

இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், ஒன்று நீங்கள் வேறு அறைக்குப் போகலாம், அவர் உங்கள் கண்ணுக்கு மறைவாகத் தேற்றலைத் தொடரலாம் அல்லது மாதவிலக்கைப் பொருட்படுத்தாமல் நீங்கள் அவரோடு கூடலாம் அல்லது உங்கள் கணவர் வேறு மாதிரியான பெண்களிடம் தன் ஆசையைத் தணிக்க நேரிடும்.

முதலில் சொன்ன மூன்று வழிகளைவிட இந்த நான்காவது வழி பெரிய விபரீதங்களில் போய் முடியும் என்பதால் பாதகமில்லாத பழக்கம்தானே என்று சுய இன்பத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, சுலபமான தீர்வு மட்டுமல்ல, சாமர்ததியமும் அதுவே.